அதிரை மற்றும் முத்துப்பேட்டையில் இன்று மாதாந்திர மின் இனைப்பை சரி செய்வதற்க்காக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் சார்பாக நேற்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிரை மக்கள் இன்று தங்கள் வீடுகளில் சேர்ந்துள்ள குர்பானி கறிகள் அனைத்தும் வீனாகிவிடுமே என்று அதை பராமரிக்கும் நோக்கில் ஈடுபட்டனர். சிலர் இன்று குர்பானி கொடுக்க தயாராகி வருகின்றனர். இந்த மின் தடை குறித்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதனை அடுத்து அதிரை த.மு.மு.க வினரின் மின்சார வாரியம் முற்றுகை போராட்டம் குறித்த அறிவிப்பால் இந்த மின் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இச்செய்தியை அறிந்த அதிரை மக்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டனர்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது