பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. மதுக்கூர் அருகே படப்பைக்காடு கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்ப உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள பாட்டுவானட்சி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 11 பெண்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர். இவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேலும் சாலையோரம் எரிக்கப்பட்ட குப்பையிலிருந்து வெளிப்பட்ட புகை மூட்டம் காரணமாக பஸ் டிரைவர் தடுமாறி பஸ்ஸினை தடுப்பு சுவர் தாண்டி பாலத்திலிருந்து வயலுக்குள் செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)

நன்றி: அதிரை நியூஸ்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது