முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் எழில்நகரைச் சேர்ந்த பால்சாமி மகன் விஜயகுமார் (வயது 30). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றபோது சைக்கிளில் சென்ற கள்ளிக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (60) மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் விஜயகுமார்மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது