
இவர் இருபதாயிரம் ரூபாயாவது கமிஸ்ஸன் வைத்திருப்பார்.
நம் வீட்டார்கள் விசா எடுத்துத் தந்தவரை நன்றாக மதித்து என் குடும்பத்துக்கு பெரிய உதவி செய்தவர் என்று என்னுவர். அவரும் ஊரில் இருக்கும் போது மிகவும் நல்லவர் போல நம்மிடம் பழகுவார். ஆனால் இவரின் இந்த அன்பான பேச்சுக்கள் பாலைவனத்தில் தோண்றும் காணல் நீரை போன்றது, தூரத்தில் இருந்து பார்த்தால் நல்லவராக தோண்றுவார், அவரிடம் அயல் நாட்டில் நேருங்கி பழகினால் தான் அவர்களின் சுயரூபம் தெரியும்.
இப்படிப்பட்ட ரூம் இன்சார்ஜுகள் தங்கள் ரூமில் வசிப்பவர்களுக்கு தரும் கொடுமைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்...
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூல் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
9.வீட்டுக்கு செல்போனின் மூலம் உரையாடுவதை ஒட்டுக்கேட்பார்
10.சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அடிக்கவும் துணிவார்
11.பிறரின் முன்பு அவமானப்படுத்திப் பேசுவார்
12.பிறரின் உடைமைகளை அனுமதியின்றி எடுப்பார்



இப்படிப்பட்ட மோசமான ரூம் இன்சார்ஜுகளால் பல கனவுகளுடன் தங்கள் குடும்ப கஷ்டத்தை போக்க தன் ஊரைவிட்டு, தன் உறவுகளை விட்டு, தன் தாய் தந்தையரை விட்டு, தன் மனைவி மக்களை விட்டு அயல் நாட்டில் பணிபுரியும் பலர் தினமும் அழுது புழம்புகின்றனர்,
பலர் காசு போனாலும் பரவாயில்லை என்று இந்த ரூம் இன்சார்ஜுகளின் தொல்லை தாங்க முடியாமல் தங்கள் அயல் நாட்டு வாழ்கையையே முடித்து ஊரில் வேலையில்லாமல் திறிகின்றனர்.
இவரின் குடும்பமோ வறுமையின் வாட்டத்தில் தவித்து தன் பிள்ளைக்கு, தன் கணவனுக்கு, தன் குடும்பதாருக்கு இப்படிப்பட்ட கொடுமையை இளைத்த அந்த ரூம் இன்சார்ஜுக்கு சாபமழை பொழிந்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வில் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் இந்தியர்களின் தற்கொலைகளுக்கு இது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நினைவிருக்கட்டும்! கஃபத்துல்லாஹ்வின் கட்டிடத்தை இடித்தால் கூட அல்லாஹ் பொருத்துக்கொள்வான், ஆனால் ஒரு முஃமினின் கல்பை (மனதை) இடித்து விட்டால் அல்லாஹ் பொருத்துக்கொள்ளமாட்டான் என்று நபி(ஸல்) அவர்களின் ஹதீஸில் வருகிறது.
நம் ஊர்காரர், நம் நண்பர், நம் உறவினர், தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார், நமக்கு எந்த கஷ்டமும் இருக்காது என்று நம்பி வரும் நம்மவர்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கொடுமை படுத்தாமலாவது இருங்கள்.
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை.
குறிப்பு: சவூதி துபாய் போன்ற நாடுகளில் பல நல்ல ரூம் இன்சார்ஜுகள் இதை ஒரு சேவையாக மக்களுக்கு செய்து வருகின்றனர் அவர்களை பார்த்தாவது திருந்த முயற்சியுங்கள்
thanks to: ADIRAI TIYA
thanks to: ADIRAI TIYA
it is very usefull article for who visit to abroad
ReplyDeleteThanks to ADIRAI PIRAI