
நாட்டில் வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பை லட்சியமாக கொண்டு மத்திய சிறுபான்மை
அமைச்சகம் சிபாரிசு செய்த தேசிய வக்ஃப் வளர்ச்சி கழகத்திற்கு மத்திய அமைச்சரவை
அங்கீகாரம் அளித்துள்ளது.
500 கோடி ரூபாய் மூலதனத்தில்
வக்ஃப் வளர்ச்சி கழகம் துவங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சிறுபான்மை நலத்துறை
அமைச்சர் ரஹ்மான் கான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 100 கோடி ரூபாய் மூலதனத்தில் வக்ஃப்வளர்ச்சி
கழகம் செயல்பட துவங்கும்.
இது அமலுக்கு வந்தால் நாட்டின் 4.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய வக்ஃப் சொத்துக்களின் மறு வளர்ச்சி சாத்தியமாகும்.
வக்ஃப் நிலங்களில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வியாபார மையங்கள், ஷாப்பிங் மையங்கள், மால்கள், ஃப்ளாட்டுக்கள், ஹாஸ்டல்கள் ஆகியன கட்டி
அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து, அதன் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பயன்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சச்சார் கமிட்டி
அறிக்கையின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலங்கள்
உள்ளன. இவற்றின் சந்தை விலை 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி 1,20,000 கோடி ரூபாய் மதிப்பாகும்.
ஆனால், வெறும் 163 கோடி ரூபாய் மட்டுமே இதன் மூலம் வருமானமாக கிடைக்கிறது.
இத்தொகை இந்நிலங்களின்
பரிபாலனத்திற்கு கூட போதாது என்று சச்சார் கமிட்டி அறிக்கை கூறியது. புதிய திட்டம்
மூலமாக ஆண்டு தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானமாக அதிகரிக்கலாம் என்று
அமைச்சர் ரஹ்மான் கான் கூறுகிறார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது