அதிரை பிறை செய்தி எதிரொலி: சேதுரோடு கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது

0



அதிரை சேது ரோடு பத்தாவது வார்டில் வசிக்கும் மக்கள் அங்குள்ள கால்வாய் பிரச்சனையால் மழை நாட்களில் படும் அவதியை கடந்த செப்டம்பர் மாதம் "வாழ்வா சாவா பயணத்தில் அதிரை சேதுரோடு 10வது வார்டு மக்கள்" என்ற பதிவும் சென்ற திங்கள்கிழமை "அதிரையில் சிறு துளி! பெரு வெள்ளம்!" என்ற தலைப்பில் அதிரை பிறை தளத்தில் பதிந்து அதிரை பேருராட்சி தலைவர் மற்றும் 10வது வார்டு மெம்பர் ஆகியோரின் கவனத்திற்க்கு கொண்டு சென்றோம். 

இதனை அடுத்து மறுநாள் அதிரை பேரூராட்சி சார்பில் அந்த பகுதி கால்வாயை சுத்தம் செய்ய ஒரு துப்பரவு பணியாளர் வந்தார். அங்கு கழிவு நிர் செல்ல விடாமல் கால்வாயில் கிடந்த குப்பைகளை ஆகற்றி, அந்த பகுதி கால்வாயில் கழிவு நீர் சுமுகமாக ஓட துவங்கியுள்ளது. 

இந்த தீர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து அதிரை பிறை மூலம் பேரூராட்சியின் கவனத்திற்க்கு கொண்டு சென்ற அதிரை பிறை செய்தியாளர் காலித் அஹமது அவர்களுக்கு பாராட்டுக்கள். இந்த பிரச்சனையை தீர்த்த 10 வது வார்டு மெம்பருக்கு அப்பகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)