கவியன்பன்” கலாம்ன்
கவிதை “பாலைவனத்
தொழிலாளியின் பா(ட்)டு”
, பாடகர் ஜஃபருல்லாஹ்வின்
இனிய குரலில்.......
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில்
நொந்து
தேவையைக் கருத்திற்
கொண்டு
…தேடினோம் செல்வம்
இன்று
யாவையும் மறக்கும்
நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும்
பிள்ளை
..பிரிவினைத் தாங்க
வில்லை!
விடையினைக் கொடுத்த
நேரம்
…விலகியே நிற்கும்
தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில்
ஏக்கம்
மடையெனத் திறக்கும்
கண்ணீர்
..மனத்தினில்
கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக்
கட்டும்
..உடையினில் வேடம்
மட்டும்!
வாயினைக் கட்டிப்
பூட்டி
…வயிற்றினைப் பசியால்
வாட்டி
காயமும் தாங்கிக்
கொண்டு
…கயிற்றினில் தொங்கிக்
கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
...வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
ஓடியே களைத்து மீண்டும்
...ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
ஓய்விலாச் சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
...பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
....கரணமும் விட்டால் மேலே!
ABUL KALAM BIN SHAICK
ABDUL KADER"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
அபுதபி
(தொழிற்சாலை)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது