நெல்லை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி

Unknown
0



நெல்லை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி 400 மெகாவாட்டை எட்டியுள்ள நிலையில் தொடர்ந்து 3 தினங்களாக இதே அளவில் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் ஒற்றை இலக்கத்தில் இருந்த காற்றாலை மின் உற்பத்தியும் நேற்று 248 மெகாவாட்டாக உயர்ந்தது.தமிழகத்திற்கு நாள்தோறும் தோராயமாக 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக 2 முதல் 3 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் உற்பத்தியில் பற்றாக்குறை நீடிப்பதால் 8 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில் முதல் முறையாக 160 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்பட்டது. 

தொடர்ந்து மின் உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கூடங்குளத்தில் நவ.29ம் தேதி முதல் நேற்று வரை 3 தினங்களாக 400 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி  நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 400 மெகாவாட் மின்சாரம் அப்படியே மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பப்படுவதாக கூடங்குளம் வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே, கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க அளவிலேயே இருந்த காற்றாலை மின் உற்பத்தியில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டது. 30ம் தேதி இரவு 59 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று காலை 8 மணிக்கு 248 மெகாவாட்டாக உயர்ந்தது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)