சில்க் சிட்டி லயன்ஸ் கிளப், குயின்ஸ் சிட்டி லயன்ஸ் கிளப், லயன்ஸ் கிளப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடந்தது.
முகாமை பட்டுக்கோட்டை நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு துவக்கி வைத்தார். முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து உள்ளிட்ட அனைத்து கண் சம்மந்தமான நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 511 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 105 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றனர்.
லயன்ஸ் கிளப் தலைவர்கள் சின்னசாமி, பழனிக்குமார், சாம்பசிவம் மற்றும் அனைத்து லயன்ஸ் கிளப் செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்ட னர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது