வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் : என் கவி வரிகட்குக் குரல்கொடுத்துள்ளார் எங்களூர்ப் பாடகர், சகோதரர் ஜஃபருல்லாஹ்.

2
இந்த இணைப்பில் காணுங்கள்; கேட்டு மகிழுங்கள்:





அதிரை ஜாஃபரின் இனிய குரலில் என் கவிதை வரிகள் :

இலண்டன் வானொலியில் கேளுங்கள் இந்த இணைப்பில்

இலண்டன் வானொலியில் அதிரையரின் குரல் ஒலித்தது
To:

அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...

http://youtu.be/MUuELnRNulQ?t=44m




தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து)  போடு
வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு
பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்
கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!



ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்
வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்
தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு
போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்

பூவுலகும் காட்டுமிடம் பூரணமாய்த் தேடு
நாவுதனில் சொல்வதற்கு நற்புலமை பாடு
தூவுகின்ற வாழ்த்துகளால் தோல்வியெலாம் ஓடும்
மேவுகின்ற நல்வழிகள் மேதினியில் கூடும்

உள்ளமதில் நற்குணங்கள் ஒன்றிவிட வேண்டி
முள்மலரில் காட்டுதல்போல் முன்னறிவைத் தூண்டிக்
கள்மனத்தை அன்புடனே கட்டிவிட நாடி
கொள்ளுமங்கு இன்பமெலாம் கோடியிலும் கோடி

அச்சமின்றிக் கூறிவிடு ஆய்வுரைகள் தந்தால்
துச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்
மிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு
நிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்!


"கவியன்பன்"
அபுல் கலாம் 

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இலண்டன் வானொலியில் அதிரையரின் குரல் ஒலித்தது
    To:


    அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...

    http://youtu.be/MUuELnRNulQ?t=44m

    http://youtu.be/MUuELnRNulQ?t=44m14s
    இதில் சொடுக்கி இவ்விணைப்பில் கேட்கலாம், நன்றி

    ReplyDelete
Post a Comment