அதிரையில் வனத்துறை கிளை அலுவலகம் அமைக்க வேண்டும்..

Unknown
0
தஞ்சை, திருவாரூர் மாவட்ட கடலோரங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. எப்போதும் பசுமை மாறாமலும், பறவையினங்களுக்கு தேவையான மீன்கள், மிருகங்களுக்கு தேவையான இரைகள் உள்ளிட்டவை இங்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும். அலை யாத்தி காடுகளில் நரி, காட்டு பன்றி, மயில்கள், காட்டு முயல்கள், காட்டு பூனை ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் சீசனுக்காக அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. தற்போது அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கிவிட்டது


இங்கு வரும் வெளி நாட்டு பறவைகள் அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் வயல் பகுதிகளுக்கு உணவுக்காக செல்வதுண்டு.
அதிராம்பட்டினம் பகுதிக்கு ஒரே ஒரு வன ஊழியர் மட்டும் தான் உள்ளார். பறவைகளை பாதுகாக்க கூடுதல் வன ஊழியர் நியமித்து அதிராம்பட்டினம் பகுதியில் வனத் துறை கிளை அலுவலகம் அமைக்கவேண்டும். காடுகள், வனவிலங்குகள், வெளிநாட்டு மற்றும் இமயமலை பகுதிகளிலிருந்து வரும் பறவைகளை பாதுகாக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலையாத்தி காடுகள் பாதுகாப்பு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)