அதிரை அல்-ஷனா பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான மார்க்க அறிவு போட்டி

0

அதிரை இந்தியன் வங்கி அருகில் உள்ள அல்- ஷனா நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளியில் கடந்த ஞாயிறு, திங்க‌ள் கிழமைகளில் பட்டுக்கோட்டை வட்டார அளவில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக இஸ்லாமிய மார்க்க அறிவு போட்டி நடத்தப்பட்டது.

கடந்த (29/12/13) ஞாயிற்று கிழமை அன்று மாணவர்களுக்காக இஸ்லாமிய பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டிகளும் நடைப்பெற்றன. அடுத்தநாள் (30/12/13) திங்கள் அன்று மாணவர்களுக்கான பொது அறிவு போட்டிகள் நடைப்பெற்றன. 

மேற்க்கண்ட இந்த போட்டிகளில் பல மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் பெயர்கள் வரும் வெள்ளிக்கிழமை ஜும்மாவில் நோட்டிஸின் அறிவிக்கப்படும். வெற்றி பெற்றவர்களுகான பரிசுகள் இந்த வருடம் அல்-ஷனா பள்ளியின் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

தகவல்: அதிரை பிறை நிருபர் தவ்ஃபீக்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)