
அதிரையில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு நீர்ஆதாரத்தை
கொண்டு வருவது தொடர்பாக கடந்த [ 12-12-2013 ] அன்று அதிரை பைத்துல்மால்
அலுவலகத்தில் கூட்டப்பட்ட முதல் கூட்டத்தில் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான சமூக
ஆர்வலர்கள் கலந்துகொண்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை எவ்வாறு இணைந்து
போராடலாம் ? இந்த பிரச்சனையை எந்த முறையில் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம் ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில் 15 பேரைக்கொண்ட குழுவினர்கள் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை
அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.


அதன்படி இன்று காலை 7.30 மணியளவில் அதிரை
பேரூராட்சியின் அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின்
தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஜமீல் M. சாலிஹ், முத்துசாமி, சுப்பிரமணியன், முஹம்மது அப்துல்லா, அஹமது அமீன், அனஸ், தமீம் அன்சாரி, வீரையன், அன்வர் அலி, வாப்பு மரைக்காயர், ராவுத்தர், மு.க.செ. அபுல் ஹசன், கவுன்சிலர்கள் முஹம்மது
செரீப், செய்யது, அதிரை நியூஸ் சாகுல் ஹமீது
உள்ளிட்ட ஏனைய சமூக ஆர்வலர்களைக் கொண்ட குழுவினர்கள் இரு வாகனங்களில் தஞ்சைக்கு
புறப்பட்டு சென்றனர்.



இதைத்தொடர்ந்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணையமைச்சாருமாகிய S.S. பழனிமாணிக்கம் MP அவர்களின் இல்லத்திற்கு சென்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

INFORMATION: ADIRAI NEWS

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது