அதிரையை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு பறவைகள்..!

0

அதிரை அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

அதிரை கடற்கரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகளில் வருடந்தோறும் நவம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவிதமான நீர்பறவைகள் வருவது வழக்கம்.

வெளிநாட்டில் இருந்து வருகின்ற பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி இருக்கும். முட்டையிட்டு குஞ்சு பொரித்து பின்னர் தாய்நாடுகளுக்கு சென்றுவிடும்.

 இப்போது பறவைகள் சீசன்  துவங்கி இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அமேரிக்கா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை என 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு குளக்கிட, செங்கால்நாரை, கூனி எரிச்சான், மயில்கால் கோழி, பாம்புதார, நத்த கொத்திநாரை, பவளக்கால் உள்ளான், பனங்கோட்டை சிறவி, பூனாரை, கடல் காவா என 50 க்கும் மேற்பட்ட வகை வகையான  நீர்  பறவைகள் இலட்சக் கணக்கில் அலையாத்திக் காடுகளில் தங்கி உள்ளன.

அதிராம்பட்டினம் துறை முகங்களை வெளிநாட்டு பறவைகள் ஆக்கிரமித்துள்ள காட்சி ரம்மியமாக உள்ளது.

courtesy:dinakaran


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)