
பட்டுக்கோட்டை நகராட்சியின் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகரசெயலாளர் கந்தசாமி தலைமைதாங்கினார்.
பட்டுக்கோட்டை நகர மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்து நகர மக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட நகரின் பாதாள சாக்கடை திட்டத்தினை அமல்படுத்திடவும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை அதிகப்படுத் திடவும், மருத்துவமனையினை நோய்பரப்பும் இடமாக இல்லாமல் சுத்தமாக வைத்திடவும், எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் வசதியினை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகல ரெயில் பாதை பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும், பாதி பணிகள் முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணியினை உடனே தொடங்கி முடிக்க வேண்டும்.
வட்ட வழங்கல் அலுவலகங்களில் முறையான விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் கொசுவினை ஒழிக்க வீரியம் மிக்க மருந்தினை தெளிக்க வேண்டும், கழிவு நீர் வாய்க்கால்களை முறையாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை அள்ளும் லாரி குப்பைகளை ரோட்டில் கொட்டிசெல்லும் வகையில் உடைந்து சேதமான நிலையில் இருக்கிறது, செப்டிக் டேங்க் லாரி புதுப்பிக்க வேண்டும், நகரில் குடிநீர் வேலை பார்க்க தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாக மூடவேண்டும், நகரில் நாய், பன்றி தொல்லைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்திட வேண்டும், நகரில் உள்ள சுடுகாடுகள் அனைத்தும் காடுகள் மண்டி சுகாதாரமும் பாதுகாப்பும் இன்றி காணப்படுகிறது.
ரெயில்வே சாலையில் கட்டப்பட்ட எரிவாயு மயானம் ஏழு ஆண்டுகள் ஆகியும் பணி முடியாமல் கிடக்கிறது. நகராட்சிக்கு ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும், அதே போல பஸ் நிலையத்தில் தெரு விளக்குகள் எரிவது கிடையாது. கழிவறை சுத்தமாக இல்லை, அங்கிருந்து துர்நாற்றம் அடிப்பதால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை, சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் கழிவறை கட்டணம் அளவிற்கு அதிகமாக வசூல் செய்கின்றனர்.
தரைக்கடைகளால் பயணிகள் நிற்க கூட இடமின்றி சிரமப்படுகின்றனர் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது