அதிரையில் டேஞ்சரான சாலைகள், பஞ்சராகும் வண்டிகள்..!

1

அதிரையை எடுத்துக்கொண்டால் ஊரின் பெரும்பாண்மையான பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பயணம் செய்யும் மக்கள்  பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் பலரின் வாகனங்களும் பழுதடைந்து வீட்டில் கிடப்பதை விட அதிகம் மெக்கானிக் கடைகளில் தான் உள்ளது. இது போன்று பாதிக்கப்பட்ட இருவரின் கலந்துரையாடலை தான் நாம் கீழே பார்க்க உள்ளோம்,,.

கரீம்: அஸ்ஸலாமுஅலைக்கும் ரஹீம்

ரஹீம்: வ அலைக்குமுஸ்ஸலாம் கரீம்

கரீம்: என்ன ரஹீம் நீ புது பைக் வாங்கி இருக்குரதா கேள்வி பட்டேனே...!

ரஹீம்: ஆமாம், டிஸ்கவர் பைக் நல்லா மைலேஜ் கொடுக்கும்னு சொன்னாங்க, நம்மலும் எவ்வளவு நாள் தான் நடந்து போறது, அதான் 

கரீம்: சரி, அப்ப ஏன் கடைத் தெருவுக்கு நடந்து வந்திருக்கா? வண்டி எங்க?

ரஹீம்: அட நீ வேற ஏம்பா, அந்த கதைய யான் கேட்குறா...நேத்து, நம்ம ஊர் அரசு பஜாஜ் ல தான் வண்டி வாங்கினேன், அப்பரம் கடைலேந்து ஊட்டுக்கு போவும்போது போஸ்ட் ஆபிஸ் ரோடு பக்கமா வந்தேன்..அந்த ரோடு தான் பள்ளம் பள்ளமா இருக்குமே.. தெரியாத்தனமா ஒரு பள்ளத்துல இறக்கிட்டேன்....உடனே வண்டி பின்ன் வீல் காத்தும் இறங்கிறுச்சு...வண்டி வாங்கி ஒரு மணி நேரம் கூட ஆவல அதுக்குள்ள வண்டி பஞ்சாரான்னு வண்டிய தள்ளிட்டு போய் பக்கத்துல் இருக்குர மெக்கானிக் கடைல போட்டுடேன்..

கரீம்: அட பாவமே! சரி நேத்து மெக்கானிக்ட குடுத்த வண்டி இன்னக்கி வாங்கலாம்ல...

ரஹீம்: அதுக்கு தான் இப்ப இங்க வந்திருக்கேன்

கரீம்: பைக் பஞ்சர் ஆவுர அளவுக்கா நம்ம ஊரு ரோடு இருக்குது...ரோட்டுக்கு கப்பி மண் கரிங்கள் போட்டு ரோட்டுல உள்ள பள்ளத்த மூடுரதா நம்ம அதிரை பிறை பாத்தனே..

ரஹீம்: நீ வேர அதுலாம் அடுத்த நாள் பேஞ்ச மழைக்கே காணாம போச்சு..

கரீம்: அப்புடியா சொல்ர...வேர என்னப்பா நெடுஞ்சாலை துரை பாத்துக்க வேண்டியது... அதுவும் கை விரிச்சிருச்சு

ரஹீம்: அதுசரிதான்..பேரூராட்ச்சியும் அவங்க நால முடிஞ்சத செஞ்சாங்க...

கரீம்: இதுக்குதான் பைக்கே வேனாம்னு விட்டுட்டேன்...அதுனால நல்லா நடந்து தொப்ப கொரஞ்சு ரிலாக்ஸா சுத்துரேன்...

ரஹீம்: இப்ப நீ எங்க போறா?

கரீம்: ஒரு ஃரெண்டு பட்டுக்கோட்டைக்கு போவ பைக்ல லிஃப்டு தறேன்டு சொன்னாறு...அங்க தான் போறேன்,,..

ரஹீம்:அடப்பாவி...நீ நல்ல பொளச்சிகுடுவா

                                   
khadir mohideen boys school road



கடற்க்கரை தெரு சாலை

பஸ் ஸ்டான்டு சாலை

ஆஸ்பத்திரி ரோடு

சி.எம்.பி லேன் சாலை
போஸ்ட் ஆபிஸ் ரோடு

கடைத்தெரு ரோடு

ஆதம் நகர் சாலை

பிலால் நகர் சாலை

மேலத் தெரு சாலை

நெசவு தெரு சாலை

ஆக்கம் மற்றும் புகைப்படங்கள்: அதிரை பிறை

காப்பி செய்பவர்கள் ஆக்கம்: அதிரை பிறை என்று தயவு செய்து கீழே தெளிவாக எழுதுங்கள்



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment