
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் காய்ச்சல் நோய் தடுப்பு
விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ
அலுவலர் டாக்டர் ஸ்ரீநாத் பேசும்போது, மழைக்காலம்
ஆரம்பித்துள்ளதால் நீரால் பரவக்கூடிய நோய்களான டைபாய்டு, வாந்தி, வயிற்றுபோக்கு, எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை
மற்றும் கொசுக்களில் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல் வர
வாய்ப்புள்ளது.
எனவே குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் மாதம்தோறும் 10, 25ம் தேதிகளில் மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும்
உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றார்.
இளநிலை பூச்சியியல் வல்லுனர்
வேலுசாமி, வட்டார சுகாதார
மேற்பார்வையாளர் விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், கலையரசன், கொசுப்புழு உற்பத்தி
பரிசோதகர்கள் கலந்து கொண்டனர். விவேகானந்தன் நன்றி கூறினார்.
thanks to: dinakaran
Orunall iruku adirai pirai orunews irka ok good
ReplyDelete