1949க்கு முன் 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை படிக்கக் கூடிய மூன்று அல்லது நான்கு ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே இங்கு இருந்தன. உயர்நிலை கல்வி கற்பதற்கோ, ஆங்கிலம் கற்பதற்கோ எந்த ஒரு பள்ளியும் இங்கு இருக்கவில்லை. 6 முதல் 11ஆம் வகுப்பு (அன்றைய S.S.L.C) வகுப்புகளைப் பயில வகுப்புகளைப் பயில விரும்பி மிகச் சிலர் அருகில் உள்ள இராஜாமடம் அல்லது பட்டுக்கோட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லக் கூடிய நிலைதான் இருந்தது.
அந்தக்காலக் கட்டத்தில் S.S.L.C
தேர்ச்சி பெற்றவர்கள் விரல்விட்டு
என்னக்கூடிய அளவில் தான் இருந்தனர். ஓரிருவர் மட்டுமே கல்லூரிப் பட்டம்
பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் மார்க்க கல்வியைக் கற்பதற்கு இரண்டு மதர்சாக்கள்
இருந்தன. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த இவ்விரு மதர்சாக்களில் இருந்து நிறைய
ஆலிம்கள் உருவாகினர்.
முதலில் 1900 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட M.K.N. மதர்ஸா அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்ட
ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி மற்றும் 1915ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட 'அல்
மதர்ஸத்துஸ் ஸலாஹிய்யா' இரண்டும்
புகழ் பெற்றவை.
அடுத்த பதிவு: காதிர் முகைதீன் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி துவக்கம் மற்றும் வரலாறு..
தொகுப்பு மற்றும் ஆக்கம்:
ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc,B.T
தலைமையாசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது