அதிரை ஆலடித்தெரு முஹைதீன்
ஜும்ஆ பள்ளி எதிரில் இளைஞர்களால் உருவான அழகிய
பூங்காவை நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் சில மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்திவிடப்பட்ட செய்தியை நாம் எல்லோரும்
அறிந்தே.
இது குறித்து அந்த பூங்காவிற்கு உழைத்த இளைஞரிடம் கேட்டபொழுது....
நாங்கள் இந்த பூங்காவை
கடந்த மூன்று மாதங்களாக பல சிரமங்கள் பட்டு உருவாக்கினோம். இந்த பூங்காவை உருவாக்குவதற்கு
முன்பு இந்த இடம் குப்பை காடாக காணப்பட்டது.
குப்பை காடாக காணப்பட்ட இந்த இடத்தை சுத்தம் செய்து பூங்காவாக
மாற்றியது தப்பா.... எங்கள் மனதில் மண்ணள்ளி போட்டு பூங்காவை சீரழித்து விட்டார்கள்.

அன்பின் சகோதரர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉங்களின் பூமணக்கும் பூமனங்கள் வாடியதைக் கண்டு மிக்க வேதனை; நீங்கள் செய்ததோ மாபெரும் சாதனை; இன்ஷா அல்லாஹ் நீங்கட்டும் உங்களின் வேதனை.