விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்

0



விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்
...........வையகம் புகழ்ந்திடும் போதினிலே
நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே
............நேர்மையை மதித்திடும் அன்புடனே!

இன்றுள மின்மடல் கண்டவராம்
,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம்
சென்றிடும் இடங்களில்  எம்மவராம்
.........சீரிளம் திறமையில் எம்தமிழர்!

உழைப்பினில் இவரையே வேண்டிடுவர்
......உலகினில் உண்மையை நாடுபவர்
அழைப்பதும் தமிழரை என்பதையே
.....அறிந்தவர் உணருவர் மன்பதையில்!

பேரிடர் நேரிடும் போதினிலே
......பேருத விசெய்திடும் மானிடராம்
யாரிடம் கேட்பினும் கூறிடுவர்
....யாமறிந் தவுண்மையை ஏற்றிடுவர்!

சிறப்புடன் நேர்மையைப் போற்றிடுவர்
......செயலுடன் சொல்லையும் காத்திடுவர்
பிறந்ததன் தாய்மொழிப் பற்றினிலே
.....பிறரையும் விஞ்சுவர் பாரினிலே!



பாடலாசிரியர் : அதிரை கவியன்பன் கலாம், அபுதபி
பாடியவர் : அதிரை ஜஃபர், ஜித்தா

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)