அதிரையில் சிறப்பாக நடந்துமுடிந்த "இளம் இஸ்லாமியன்" மார்க்க அறிவு போட்டி..! (புகைப்படங்கள்)

2
 அதிரையில் சில நாட்களாக நமதூர் மாண‌வர்கள், பெற்றோர்கள் மற்றும் உலமாக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டியை பற்றி என கூறலாம். இந்த போட்டி அதிரை ஏ.எல். மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. இந்த போட்டியில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாட்டை அதிரை இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

முன்னதாக இந்த போட்டிக்காக கடந்த டிசெம்பர் மாதம் 28 முதல் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் 5ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதில் பல மாண‌வர்கள் தங்கள் பெயரை ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இவர்களுக்கு இன்று போட்டி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாண‌வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 3 மணி நேரத்துக்குள் தேர்வை சிறப்பாக எழுதினர்.

இதில் வெற்றி பெரும் மாண‌வர்களுக்கு வரும் 17 ஜனவரி 2014 (வெள்ளிக்கிழமை) மாலை 5:00 மணிக்கு ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மாடியில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். 

குறிப்பு: போட்டியில் கலந்துக்கொண்ட மாண‌வர்கள் அனைவருக்கும் சாண்றிதல் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவே அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பரிசளிப்பு விழாவிற்க்கு எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கிரோம்.
















Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அல்லாஹ் வெற்றியாளர்களுக்கு பணிவையும், வெற்றி வாய்பை இழந்தவர்களுக்கு பொருமையையும் கொடுப்பானாக

    ReplyDelete
Post a Comment