தஞ்சாவூர்
மாவட்டத்தில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் ஜன. 22-ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என்.
சுப்பையன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை
நடைபெற்ற 2013 - 14 ஆம்
ஆண்டுக்கான ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கிராம
ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர்
மேலும் பேசியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில்
கிராமப்புற மாணவ, மாணவிகளை
விளையாட்டில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் விதமாகவும், கிராமப்புற இளைஞர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறியவும், விளையாட்டுத் திறமைமிக்க வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து
அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசின் மூலம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பைக்கா விளையாட்டுப்
போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஓன்றியங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஊரக
விளையாட்டுப் பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகள்
ஜன. 22-ம் தேதி ஆண்கள்
மற்றும் 16-வயதுக்குள்பட்ட
விளையாட்டு வீரர்களுக்கும், ஜன. 23-ம் தேதி 16-வயதுக்குள்பட்ட
விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நடத்தப்படவுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அளவிலான
பைக்கா விளையாட்டுப் போட்டிகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆண்களுக்கு கால்பந்துப் போட்டியும், 16 வயதுக்குள்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு (1.1.1998-அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்), கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து (அல்லது) டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளும்
நடத்தப்படவுள்ளன.
போட்டிகள் நடத்தப்படவுள்ள
விவரத்தை சம்பந்தப்பட்ட உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியரிடம் விவரம்
பெற்று போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில்
கலந்து கொள்ளவுள்ளவர்கள் பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு 9443587687 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.
ஊராட்சி ஒன்றிய
அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற 16-வயதுக்கு ள்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான பைக்காக விளையாட்டுப் போட்டியில்
கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா
விளையாட்டு அரங்கில் ஜன. 24-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும், 25-ம் தேதி விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நடத்தப்படவுள்ளது
என்றார் சுப்பையன்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது