அதிராம்பட்டினம் அருகே இரும்பு கம்பியால் அடித்து இளம்பெண் கொலை

Unknown
0

 அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளி கொண்டானை சேர்ந்த முருகேசன் என்பவர் மனைவி மல்லிகா (வயது 27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு- இறந்து விட்டார். மல்லிகா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் மல்லிகாவுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரெங்கசாமியின் மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது மகள் சாமூண்டீஸ்வரி ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ரெங்கசாமி அவரது மகன்கள் கோவிந்தராஜ் (27), விஜய் (20) ஆகிய 3 பேரும் மல்லிகாவை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மல்லிகா மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார். பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

thanks to: MAALAIMALAR

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)