சாலை விபத்துகளை தடுக்க தமிழக அரசு புதிய நடவடிக்கை

0

தமிழகத்தில் விபத்துகளைக் தடுக்க எல்லா மாவட்டங்களிலும் சாலைப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவில், மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், ஆர்.டி.ஓக்கள், என்.ஜி.ஓ.க்கள் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மொத்த விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பீடு, இறப்பு விகிதம், மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை குறித்து இந்தக் குழு அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்புகிறது. 

அதன்படி, கடந்த ஆண்டுக்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத் துத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வும் மாவட்ட வாரிய சாலைப் பாதுகாப்புக்குழு அமைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்து தொடர்பான அறிக்கையை இந்தக் குழு அனுப்பும். 

அதன்படி2013-ல் நடந்த விபத்து நிலவரங் களின் அறிக்கை கேட்டு உத்தர விடப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது, அதற்கான காரணம், தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கையில் விரிவாக குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு வரும் அறிக்கையின் அடிப்படையில், விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். தேவைப் படும் இடங்களில் பாலம் அமைத்தல், புதிய சர்வீஸ் சாலை அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல், வேகத்தடை அமைத் தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம் என்றனர்.
-tamil hindu

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)