அதிரை அருகே விருந்தாக மாறிய வெளிநாட்டு பறவைகள்..!

0
அலையாத்தி காடுகள் பகுதியில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுவது தடையின்றி நடந்து வருகிறது.  பொங்கல் அன்று பலரது வீடுகளில் வெளிநாட்டு பறவைகள் தான் விருந்தாக பரிமாறப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடு ஆசியாவில் மிகப்பெரிய காடாகும். தமிழக அரசு சமீபத்தில்  இதை சுற்றுலா தலமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இதனால் தினந்தோறும்  சுற்றுலா பயணிகள் வருகை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 

இந்த அலையாத்தி காட்டில் எந்த நேரமும் லட்சக்கணக்கான உள்நாடு  மற்றும் வெளிநாட்டு பறவைகள் இருக்கும். முன்பு இப்பகுதியை சேர்ந்தவர்கள் அரியவகை பறவைகளை வேட்டையாடி வந்தனர். இதை தடுக்க வனத்துறை கடும் நடவடிக்கை  எடுத்தது. இதனால் வேட்டையாடுவது குறைந்து வந்தது. இருந்தாலும் பலரும் பறவை வேட்டையில் மறைமுகமாக ஈடுபட்டு வரு வதாக வனத்துறைக்கு தொடர்ந்து தகவல் வந்தாலும் அதனை வனத்துறை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தது. 

சமீப காலமாக முத்துப்பேட்டை தெருக்களில் வேட்டையாடிய பறவைகளை வெளிப்படையாக கூவி விற்கும் சூழ்நிலை உருவாகி  விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பலரும் பறவைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். பொங்கல் அன்று பலரது  வீடுகளில் வெளிநாட்டு பறவைகள்தான் விருந்து. இதில் கூழைக்கிடா, சிறவி, மடையான், கொக்குகள் போன்ற பறவைகள் அதிக அ ளவில் விற்பனையாகி வருகிறது. இதற்கு ஆதாரமாக தெருக்களில் ஆங்காங்கே பறவைகளின் இறக்கைகள் குவியல் குவியலாக  கிடக்கிறது. பலரது வீடுகளில் பறவைகளை உயிருடன் அதிக அளவில் வாங்கி வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப சமைத்து சாப்பி ட்டு வருகிறார்கள். 
இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுத்து இதற்கு துணையாக இருக்கும் வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.
-dinakaran

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)