சென்னையில் சிறுவனை விசாரணை என்ற பெயரில் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை ஆய்வாளர்
குறித்துபரபரப்பு தகவல்
வெளியாகியுள்ளது. நீலாங்கரையில் சிறுவன் தமீம் அன்சாரியை சந்தேகத்தின் பேரில் கைது
செய்த காவல்துறை, விசாரணை என்ற பெயரில்
சிறுவனின் தொண்டையில் துப்பாக்கியால் சுட்டதினால், படுகாயமடைந்த சிறுவன்
சென்னை க்ளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான். இந்நிலையில், சிறுவனைச் சுட்ட
ஆய்வாளர் புஷ்பராஜ் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறை ஆய்வாளர்
புஷ்பராஜ். கடந்த 2011ஆம் ஆண்டு மெரினா
காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த போது, திருட்டு வழக்கில்
ஈடுபட்ட ஒருவரை விசாரித்த போதும் இதே போன்று துப்பாக்கியால் தொடையில்
சுட்டிருக்கிறார். அப்போது, இந்த வழக்கில்
தலையிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை மூடி மறைத்ததாக
கூறப்படுகிறது. அதன் பின்னர், 2013 ஜனவரி 21ல் புஷ்பராஜ் பதவி
உயர்வில், நீலாங்கரை குற்றப்பிரிவு ஆய்வாளராக பதவி ஏற்றுள்ளார்.
தற்போது, மீண்டும் துப்பாக்கி
சூடு நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனாலும் ஆய்வாளர் புஷ்பராஜை, சிறுவனை சுட்ட
வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் முயற்சித்து வருவதாகக்
கூறப்படுகிறது. அதனாலேயே அவர் மீது ஜாமீனில் வெளிவரும் அளவில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை
ரீதியான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் இருந்து
துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துப்பாக்கி, தடயவியல் துறைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி
தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சிறுவனின் தாய் சபீனா பானு சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள்
ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து, 28ம் தேதி
காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சிறுவனுக்கு அதே தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது