
அதிரை அருகே சேண்டாக்கோட்டை, ராஜாமடம் பகுதிகளில் மூடப்பட்ட மணல் குவாரிகளைத் திறக்க
வேண்டுமென மாநில அரசுக்கு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற
தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கடும் மணல் தட்டுப்பாடு காரணமாக
பட்டுக்கோட்டை தொகுதியில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப்
பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டடப் பொறியாளர்கள், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர்.
எனவே, இப்பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு, சேண்டாக்கோட்டை, ராஜாமடம் பகுதியில் உடனடியாக மணல் குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். பட்டுக்கோட்டை நகரில் நடக்கும் சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத்
துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ்
தலைவர் அதிரை மொய்தீன் கனி தலைமை வகித்தார். செயலர்கள் செந்தில், கார்த்தி,
அசாருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் தலைவர் ஏ.கே. குமார் வரவேற்றார். ஜி. மோகன்ராஜ் நன்றி கூறினார்.
தகவல்: அதிரை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மைதீன் கனி

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது