அதிரை அன்றும் இன்றும் - (அமைவிடம், மக்கள் தொகை மற்றும் கால நிலை)

0
அமைவிடம்:
நஞ்சையும்புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் வங்கக் கடற்கரையோரம் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்ட எல்லைகளையொட்டி அமைந்துள்ள ஒரு பேரூர் அதிராம்பட்டினம்.

 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை அரசாண்ட  'அதிவீரராம பாண்டியன்என்னும் மன்னனின் பெயரைத் தாங்கி 'அதிவீரராம பட்டினம்என வழங்கப்பட்டு வந்ததாகவும் அப்பெயர் நாளடைவில் சுருங்கி அதிராம்பட்டினம் என வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வூரில் மிகப்பெரும் உலமாக்களும்கொடை வள்ளல்களும்இலக்கியப் புலவர்காளும்இந்தியச் சுதந்திர தியாகிகளும்,  சமுக சேவகர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்வாழ்ந்தும் வருகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான தொழிர்சாலைகளோவணிக மையங்களோஅரசு அலுவலாகங்களோ இல்லாவிடினும் இங்கு கல்விக்கூடங்களுக்கு பஞ்சமில்லை.

கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய அளவிலான கணக்கெடுப்பில் அதிராம்ப்ட்டினம் பற்றிய முழு விவரம்:

1.இந்திய மக்கள் தொகை 2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி அதிரையில் மொத்தம் 27697 மக்கள் வசித்துவருகின்றனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். ஆண்கள் (41%) அதாவது (13218) பேர் மற்றும் பெண்கள் 52.27% பேர்  அதாவது (14479) பேர் ஆவர். 

2)நமதூரில் கல்வியரிவு உள்ளவர்கள் சராசரியாக 69.24% ஆகும்.
   
3)நமதூரின் மொத்த மக்கள் தொகையில் 13.31% பெர் வயதிற்க்குட்பட்டவர்கள்.
   
4)நமதூரில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக இஸ்லாம் உள்ளது,நமதூரில் மொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 70% பேர்.

உலக வரைப்படத்தில் நமதூரின் இடம்:
     நமதூர் உலக வரைப்படத்தில்  10.20°N 79.24°E[2] இடத்தில் வங்கால விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.

நமதூரின் சீதோசன நிலை:
    வெயில்-ஏப்ரல்,மே மாதங்கள்


    குளிர்  - டிசெம்பர்,ஜனவரி மாதங்கள்
    மழைக் காலம் - அக்டொபர்,நவம்பர்

வருடாந்திர சராசரி மழைப் பொழிவு 125cm

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)