அதிரைக்கு வருகை புரிந்த கலெக்டர் மற்றும் ஐ.ஜி..!

Editorial
0

கடலில் இயற்கை, இடர்பாடுகளில் சிக்கி கொண்டால் 1093 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மீனவர்களுக்கு ஐஜி அறிவுரை வழங்கினார்.அதிராம்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கலந்தாய்வு, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கடலோர பாதுகாப்பு குழுமம் ஐஜி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். 


கூட்டத்தில் கலெக்டர் சுப்பையன் பங்கேற்றார். இதைதொடர்ந்து  மீனவர்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. கடல் வளம் அழிந்து வருவதால் இரட்டை மடி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஐஜி சொக்கலிங்கம் பேசுகையில், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடிக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


 கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது மீனவர்கள் 2 படகுகள் அல்லது 3 படகுகள் சேர்ந்து செல்லுங்கள். அப்போதுதான் ஆபத்து நேரத்தில் உதவி செய்து கொள்ள முடியும். கடலில் இயற்கை இடர்பாடுகளில் சிக்கி கொண்டால் 1093 எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

அதிவிரைவு படகு, சிறிய ரோந்து கப்பல், ஹெலிகாப்டர் ஆகியவற்றை பயன்படுத்தி மீனவர்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றுவர். கடலில் எந்த பொருள்கள் மிதந்து வந்தாலும் எடுப்பதற்கு முயற்சிக்க கூடாது. அன்னியர் நடமாட்டம் இருந்தால் 1093 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார். 

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்திலிருந்து மீனவ சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)