இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் மரணம்..!

Editorial
1


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது இன்று 03.02.2014 தலைமையகத்தில் வபாத் ஆனார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.

ideal vision 

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத்தலைவரும் சமுதாய புரவலரும், கவிஞர், சமுதாயப் பாடகர், கூத்தாநல்லூர் வடக்குக் கோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறங்காவலுருமான வடக்குக் கோட்டையார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய அல்ஹாஜ் வி.எம். செய்யது அஹமது அவர்கள் இன்று (திங்கள் 03.02.2014) காலை சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முஹ்யத்தீன் அவர்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து இன்று காலை மாநில தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலுக்கு வருகை தந்தார்கள். தலைவர் அவர்களின் உடல் நலத்திற்கு அனைவரும் துஆ செய்தனர். தலைவர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க தலைமையகம் வந்த வடக்குக்கோட்டையார் அவர்கள் தலைவரை சந்தித்து பேசி கொண்டு சோபாவில் இருந்தவாறே வஃபாத்தானார்கள்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், தாய்ச்சபை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

    உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (07.02.2014) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

    நன்றி! வஸ்ஸலாம்.

    அன்புடன்….

    மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
    மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்
    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
    ——————————————————————————————————-
    Web & Media Wing,
    Kuwait Tamil Islamic Committee (K-Tic)
    Kuwait.

    Hotline : (+965) 97 87 24 82
    Emails : q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
    Official Website : http://www.k-tic.com
    Yahoo Group : http://groups.yahoo.com/group/K-Tic-group
    Google Group : http://groups.google.com/group/q8tic
    Facebook Page: https://www.facebook.com/q8tic
    Facebook Group: https://www.facebook.com/groups/q8tic
    Ustream (Live): http://www.ustream.tv/channel/ktic-live

    ReplyDelete
Post a Comment