பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் தமிழகம் புதுச்சேரியில் நாளை மறுநாள்
தொடங்குகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வரக்
கூடாது. விடைத்தாளில் கலர் பென்சில் மற்றும் ஸ்கெட்ச் பேனாவை பயன்படுத்தக்
கூடாது என்றும் தேர்வுத் துறை அதிரடி தடைகளை போட்டுள்ளது. பிளஸ் 2
வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை மறுநாள் (மார்ச் 3ம் தேதி) தொடங்கி மார்ச்
25ம் தேதி வரை நடக்கிறது. எந்த
ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து
நடைமுறைகளும் கணினி வழியாகவே செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின்
தேர்வு விண்ணப்பங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல
ஆன்லைன் மூலமே, தனித் தேர்வர்களின் விண்ணப் பங்களும் பெறப்பட்டு
அவர்களுக்கு ஆன்லைன் மூலமே ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள், அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு 27ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல பள்ளிகளில் நேற்றே
பள்ளி மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. நேற்று வராத
மாணவர்களுக்கு 3ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த
ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில்
மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டிய தில்லை.
அனைத்தும்
விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள்,
தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும்.
தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு நேரத்தில் கடை பிடிக்க வேண்டியவை
குறித்து விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதில்
கூறப்பட்டுள்ளபடி, ‘செல்போன் எடுத்துவரக் கூடாது என்று
உத்தரவிடப்பட்டிருந்தது. இது எல்லா தேர்வுகளிலும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு
அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வரக்கூடாது என்று தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர
அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இந்த ஆண்டு ஷூவை தேர்வு அறைக்கு
வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் வர வேண்டும் என்று
அறிவித்துள்ளனர்.அறிவியல், கணக்கு, வணிக கணிதம், கணக்குப் பதிவியல்
உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில், முக்கிய விடைகள் மற்றும்
வரைபடங்களை ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி போடுவது
வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக்கூடாது. குறிப்பாக
ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு கண்டிப்பாக
இடக்கூடாது. சிவப்பு மையை பயன்படுத்தக்கூடாது.
40 பக்கம் கொண்டு
விடைத்தாளில், அந்த பக்கங்களுக்குள்ளாகவே விடைகளை எழுத வேண்டும். தவிரவும்,
நீல மை, கருப்பு மை பேனாக்களை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய
பாடங்களை ஒரே தேர்வு அறையில் எழுத வேண்டும். மற்ற பாடங்களுக்கு தினமும்
அறைகள் மாறி வரும். எனவே தேர்வு எழுத வரும் மாணவர்கள், முன்னதாகவே
தங்களுக்கு எந்த தேர்வு அறையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து
கொண்டு தேர்வு எழுத வர வேண்டும். கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் இடைநிலை
ஆசிரியர்களுக்கும் தேர்வு அறை மேற்பார்வையாளர்களாக பணியாற்ற வேண்டும் என்று
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது