மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் 239 பயணிகளுடன் மாயமாகியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக உள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாட் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
விமானம் மாயமானது எப்படி?கோலாலம்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2.40க்கு விமானம் புறப்பட்டது. 4 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் போயிங் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பயணிகளின் உறவினர்கள் விமானம் பற்றிய தகவல்களை +60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது