
இரு குழந்தைகள், 12 விமானப்பணியாளர்கள் உள்ளிட்ட 239 பேருடன் சீனாவின் பீஜிங் நோக்கி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பயணமாகிய மலேசியன் எயார்லைன் விமானம் வியட்னாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (08) காலை, மலேசிய நேரம் 2.40 (இலங்கை நேரம் அதிகாலை 5.10) மணிக்கு 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு பீஜிங் நோக்கி விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தின் பின்னர், வியட்னாம் வனப்பகுதியில் 35ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, விமானக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டமையால் விமானம் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியட்னாம் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோது, வியட்னாமின் பூ குவாக் தீவிலிருந்து 153 கடல்மைல் தொலைவில் குறித்த விவானம் விபத்துக்குள்ளானதை ராடரில் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது