அதிரையை சேர்ந்த அபூபக்கர் அவர்கள் நமதூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இவருடைய தந்தை பெயர் முகம்மது கோயா, அவர்கள் அதிரையில் புகழ்பெற்ற நாட்டு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபூபக்கர் அவர்களுடைய மகன் தான் மருத்துவமனையிலேயே தங்கி உதவிசெய்து வருகிறார்.
இவருடைய இளமை காலத்தில் இவர் நமதூர் ஊர் காவல் படையில் பணிபுரிந்து பல சேவைகள் ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மருத்துவ தேவைக்கு ஏழ்மையான சூழலில் எந்த ஒரு சிகிச்சையும் செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர் மக்களிடம் உதவி கோரி அதிரை பிறைக்கு அளித்த பேட்டி..
இந்த வீடியோ பார்த்தவர்கள் இவருடைய இயலாமையை கருத்தில் கொண்டு உதவி புரியுமாறு மக்களிடமும் சமுக இயக்கங்களிடமும் அதிரைபிறி.இன் சார்பாக கேட்டுக்கொள்கிறொம்.
தொடர்புக்கு..
ஹாஜி. A. அப்துல் முனாப் (LAWYER) - 9842411490
M.R. ஜமால் முஹம்மது - 9894500545

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது