அதிரையில் தொடரும் மின்வெட்டு, மக்கள் அவதி

1

கடந்த சில மாதங்களாக நமதூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்சாரம் சீரான முறையில் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது சில நாட்களாக நமதூரில் ஒரு நாளைக்கு 10 தடவைக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நாள் ஒன்று 6 மணி நேரத்திற்க்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

காலையிலேயே மின்சாரம் தடைபடுவதால் தண்ணீர் ஏற்றுவதற்க்கு கூட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் காலம் வேறு துவங்கியுள்ளதால் வீட்டில் உள்ளவர்களையும் வியர்வையில் குளிக்க வைக்கிறது இந்த மின் வெட்டு.

"எங்களுக்கு வெயில் நேரத்துல தான் வியாபாரமே ஓடும், இதுல இவங்க கரண்ட வேற கட் பண்ணிட்டா நாங்க பொளப்புக்கு என்னா பண்ணுரது" என்கிறார் ஜீஸ் கடை வியாபாரி ஒருவர்.

மேலும் இந்த மின் வெட்டால் பலரின் வியாபாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு வேறு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதால் மாணவர்களும் இரவு நேரங்களில் படிப்பதற்க்கு கஷ்டப்படுகின்றனர். இது குறித்து யாரவது அதிரை மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து சரியான விளக்கம் இல்லை என்று கூறுகின்றனர் மக்கள்.

பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் ஆகியவர்களின் நலன் கருதி மின் வெட்டு நேரத்தை குறைத்துக்கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கின்றனர்.

பொதுநலம் கருதி பதிவோர்,
அதிரைபிறை.இன்       

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வெள்ளைக்காரனை கொடுமைக்காரன் என்று யாரும் சொல்லாதிர்கள் ஏனென்றால் அவன் நமது நாட்டை சில வருடங்கள் ஆட்சி செய்துவிட்டு சென்றுவிட்டான். நமது நாடு அவன் கையில் இருந்தவரைக்கும் நல்லாத்தான் இருந்தது. என்றைக்கு இந்த நாட்டை நமது கையில் கொடுத்துவிட்டு சென்றானோ அன்றிலிருந்து தான் இந்த நாடு விளங்காமல் போனது. வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் லண்டனை பாருங்கள் எப்படிப்பட்ட வளர்ச்சி, உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக லண்டன் இருக்கிறது. அப்பேற்பட்ட நாட்டில் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நொடி கூட மின்சாரம் நின்றது கிடையாது. இந்தியன் ஆட்சி செய்கிற நமது நாட்டை பாருங்கள். சுதந்திர இந்தியாவில் குடிமக்களாகிய நமக்கே வேலை இல்லை. பசி, பட்டினி, லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, 24 மணி நேரத்தில் காலை நான்கு மணி நேரம், மதியம் இரண்டு மணி நேரம், இரவு முன்று மணி நேரம், மாதத்தில் ஒரு நாள் என்று மின்சாரம் வருவது இல்லை இப்படி இருந்தால் இந்திய நாடு உறுப்படுமா? நமது ஊரில் மின்சாரத்தை நம்பி தொழில் தொடங்கியவர்களின் நிலை என்ன? மின்சாரத்தின் மூலம் எங்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டத்திற்கு உண்டான தொகையே மின்சார துறை எங்களுக்கு வழங்குமா?
    மின்சாரத்தை துண்டித்துவிட்டு குவாட்டர் வாங்கி அடிச்சிட்டு குப்பற படுத்து தூங்குவது இவர்களுக்கு பொழப்பா போச்சு. நமதூர் EB வெளங்கிடும்.

    ReplyDelete
Post a Comment