தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து வாக்குசேகரிக்க தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை(வியாழக்கிழமை) தஞ்சைக்கு வருகிறார். மாலை 3 மணிக்கு திருவையாறு தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டியில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.
3.40 மணிக்கு ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட உளூர் பகுதியிலும், 4 மணிக்கு ஒரத்தநாட்டிலும், 4.30 மணிக்கு பாப்பாநாட்டிலும் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு பட்டுக் கோட்டையிலும், 6 மணிக்கு அதிராம்பட்டினத்திலும், இரவு 7 மணிக்கு பேராவூரணியிலும், 8.40 மணிக்கு திருவையாறிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இரவு 9.10 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.


This comment has been removed by the author.
ReplyDelete