இந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் !

Unknown
0
             

              இந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் தாம்பரத்தில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
விமானப்படை ஏர்மேன் (தொழில்நுட்பம் அல்லாதது) பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தில் வருகிற 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர்,
தஞ்சாவூர், கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த வர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விமானப்படையில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். விண்ணப்பதாரர் 1.2.1994-ம் ஆண்டுக்கும் 31.5.1997 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆள்சேர்ப்பு முகாம் தொடர் பாக ஏதேனும் விளக்கம் தேவைப் பட்டால் தாம்பரம் விமானப்படை நிலைய ஏர்மேன் தேர்வு மையத்தை 044-22390561, 22396565 (எக்ஸ்டென்சன் 7833) ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 94452-99128 என்ற செல்போன் எண்ணிலோ அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)