தஞ்சாவூர் தொகுதி வேட்பாளார்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு கலெக்டர் அறிவுரை...!

0
கலெக்டர் சுப்பையன் பேசும்போது, வேட்பாளர் தனது படம் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர், ஸ்டிக்கர்களை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் அந்த அலுவலகங்கள் தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கக்கூடாது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அதையொட்டி அமைக்கக்கூடாது

பள்ளிகள், மருத்துவமனைகளை சுற்றி அமைக்கக்கூடாது. வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் அமைக்கக்கூடாது. ஒலி பெருக்கிகளை இரவு 10 மணிக்கு பிறகும், அதிகாலை 6 மணிக்கு முன்பும் பயன்படுத்தக்கூடாது. பொதுக்கூட்டங்கள் இரவு 10 மணிக்கு பிறகும், காலை 6 மணிக்கு முன்பும் நடத்தக்கூடாது என்றார்.

தஞ்சை, :  வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளரையும் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தேர்தல் விதியை கடைபிடிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான அறிவுரை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்பையன் பேசும்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் நன்னடத்தை நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வழிபாட்டு தலங்களான கோயில், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது

வாக்குகள் சேகரிப்பதற்கு மதம் ஒரு தடையல்ல. எந்த மதத்தை சேர்ந்தவர்களிடத்திலும் வாக்கு சேகரிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வேட்பாளர் அதிகபட்சம் 3 கார்கள் தான் பயன்படுத்தலாம். வேட் புமனு தாக்கல் செய்ய வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

தேர்தல் பணிக்காக வேட்பாளர் வாகனங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட அனுமதியின் அசல் நகலை வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதியில் வாகனத்தின் எண் மற்றும் வேட்பாளரின் பெயர் குறிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் வாகனங்களை பயன்படுத்துவது விதிமுறைகளுக்கு புறம்பாக வேட்பாளர் தேர்தல் பணி மேற்கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

 சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிளாஸ் டிக் அல்லது பாலித்தீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது

வேட் பாளர் சார்பில் வாக் காளருக்கு புடவை, சட்டை போன்ற உடை களை வழங்கக்கூடாது. தேர்தல் பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் வேட்பாளர் தேர்தல் சம்பந்தப்பட்ட விவரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிட்டு ஒளிபரப்பக்கூடாது

வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு முன்பு வாக்கு சேகரிப்பு முடிந்த பிறகு பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஜவுளி மற்றும் பாத்திர கடைகளில் மொத்த ஆர்டர் யாரும் கொடுத்தால் கண்காணிக்க வேண்டும். வெப் கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். அடகு கடை களில் மொத்தமாக நகை மீட்கப்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும். அடமானம் வைத்தவர்களின் லிஸ்ட் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்தர வேண்டும் என்றார்.

டிஆர்ஓ சந்திரசேகரன், துணை ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிமுக காந்தி, திமுக செல்வம், பாஜ விநாயகம், தேசியவாத காங்கிரஸ் துரைமாணிக்கம், தேமுதிக அமர்நாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செந்தில்குமார் மற்றும் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள், அடகு கடை உரிமையாளர் கள் கலந்து கொண்டனர்.

courtesy: dinakaran

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)