ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு 21ம் தேதி குலுக்கல்!

0
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களை தெரிவு செய்ய வரும் 21ஆம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஹஜ் 2014-ற்காக சுமார் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புனிதப் பயணிகளிடமிருந்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. எனவே, புனிதப் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக் கொண்டபடி ஹஜ் 2014-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய குலுக்கலை நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 21.4.2014 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.
ஹஜ் 2014-ற்காக, தமிழ் நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள் இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

courtesy: lalpet express

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)