4 கால், 4 கைகளுடன் பிறந்த விநோத குழந்தை ..!!!

Unknown
0
                

               சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள உய்ச்சூ நகரை சேர்ந்த சென் என்பவருடைய மனைவிக்கு கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 4 கைகள் மற்றும் 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம் அதிகப்படியான 2 கைகள் மற்றும் 2 கால்களை மருத்துவர்கள் அகற்றினர்.
               இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் “அக்குழந்தை தற்போது நலமாக உள்ளது. கருவில் இரட்டை குழந்தைகளாக வளரும் போது ஏற்பட்ட மரபணு கோளாறால் இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. இது மிகவும் வெற்றிகரமான அறுவை சிகிச்சையாகும்” என்று தெரிவித்தனர்.
               குழந்தையின் தந்தையான சென் கூறுகையில் “என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். பணம் சம்பாதிப்பதிலேயே நான் குறியாக இருந்த காரணத்தால் அவளை கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதனை நினைத்து தற்போது மிகவும் வேதனைப்படுகிறேன்” என்றார்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)