கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி ரயில் மற்றும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் நகை, பணம் மற்றும் பயணிகளின் உடமைகளை திருடி வருகின்றனர்.
ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் ஜன்னலோரம் நகை அணிந்து அமரக்கூடாது. மற்ற பயணிகளிடம் தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் அதனை அலட்சியம் செய்து சில பெண் பயணிகள் ரயில் மற்றும் பஸ்களில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்து வருகிறார்கள்.
இது கொள்ளையர்களுக்கு மிகவும் சாதகமாக ஒன்று. மேலும் ரயில் மற்றும் பஸ்களில் ஏறி தூங்கி கொண்டு இருக்கும் பயணிகளின் உடமைகளை திருடர்கள் திருடிச்செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.
எனவே நீங்கள் எங்கும் பயணம் செய்தாலும் ஜாக்கிரதை முக்கியம் என போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது