அதிரை வாக்குப்பதிவில் சில குழப்பங்கள் இருந்தாலும் மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இதுவரை நமதூரில் மொத்தம் 6193 வாக்குகள் பதிவாகியுள்ளது. அஃதாவது இதுவரை 65% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் வாக்குப்பதிவு முடிய 2 மணி நேரம் மீதம் உள்ளது. எனவே மேலும் இந்த வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அகரம் பயின்ற பள்ளியிலே
ReplyDelete*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!
குறையைச் சுட்டும் விரலில்தான்
************குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
**********களையச் செய்யும் கறைதானே
இறைவன் நாட்டம் விடுப்பினிலே
*********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
*********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!