அதிரையில் சிறுவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

1


















அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, இஸ்லாமியப் பயிற்சி மையம், ஏ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் குர்ஆன் - ஹதீஸ் வழியில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் வரும் மே மாதம்  3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இறுதியாக மே 17ம் தேதி முகாம் நிறைவும் பரிசளிப்பும் நடைப்பெறும்.

5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அதிரை பிலால் நகரில் உள்ள இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் நடைப்பெறும்.

3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு ஏ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைப்பெறும்.

இந்த முகாமில்..
  1. இஸ்லாத்தில் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள்
  2. தஜ்வீது சட்டங்களுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
  3. பேச்சுக்களைப் பயிற்சி
  4. நினைவாற்றலை அதிகப்படுத்தும் பயிற்சி
  5. உறவுகளின் உரிமைகளும் கடமைகளும் 
  6. ஈமானின் அடிப்படைகள்
  7. இறைமறை அத்தியாயங்கள் மனனப் பயிற்சி
  8. மன அழுத்தம் நீங்க உளவியல் பாடங்கள்
  9. நபித் தோழர்கள் வரலாறு
  10. இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியார்களின் வரலாறு
இந்த பயிற்சி முகாமில் பங்குகொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. 

முன்பதிவுக்கும், மேல் விபரங்களுக்கும் +91-4373-240930, 9043727525, 9543577794 ஆகிய எண்களுக்கு தொடர்புக் கொள்ளுங்கள்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நம்ம சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை. நாம் சமுதாயத்தில் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும் அதை முதலில் கற்று கொடுங்கள்.

    ReplyDelete
Post a Comment