அதிரை தாருத் தவ்ஹீத், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, இஸ்லாமியப் பயிற்சி மையம், ஏ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் குர்ஆன் - ஹதீஸ் வழியில் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இறுதியாக மே 17ம் தேதி முகாம் நிறைவும் பரிசளிப்பும் நடைப்பெறும்.
5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அதிரை பிலால் நகரில் உள்ள இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் நடைப்பெறும்.
3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு ஏ.எல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைப்பெறும்.
இந்த முகாமில்..
- இஸ்லாத்தில் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள்
- தஜ்வீது சட்டங்களுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
- பேச்சுக்களைப் பயிற்சி
- நினைவாற்றலை அதிகப்படுத்தும் பயிற்சி
- உறவுகளின் உரிமைகளும் கடமைகளும்
- ஈமானின் அடிப்படைகள்
- இறைமறை அத்தியாயங்கள் மனனப் பயிற்சி
- மன அழுத்தம் நீங்க உளவியல் பாடங்கள்
- நபித் தோழர்கள் வரலாறு
- இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியார்களின் வரலாறு
இந்த பயிற்சி முகாமில் பங்குகொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
முன்பதிவுக்கும், மேல் விபரங்களுக்கும் +91-4373-240930, 9043727525, 9543577794 ஆகிய எண்களுக்கு தொடர்புக் கொள்ளுங்கள்.


நம்ம சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை. நாம் சமுதாயத்தில் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும் அதை முதலில் கற்று கொடுங்கள்.
ReplyDelete