அதிரை முழுவதும் வாக்குசேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்

1
அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையார் வாக்கு சேகரித்தார். பிள்ளைமார் தெரு, பழஞ்செட்டித்தெரு, கரை யூர் தெரு, காந்தி நகர், கடற் கரை தெரு, தரகர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, புதுத் தெரு, மேலத் தெரு, புது மனைத் தெரு, சி.எம்.பி லையன் என 21 வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.



 பின்னர் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் வாக்கு சேகரித் தார். காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையா ருக்கு எம்எல்ஏ ரங்கராஜன் வாக்கு சேகரித்தார். அதிராம்பட்டினம் காங்கி ரஸ் தலை வர் கரீம், நகர காங்கிரஸ் பொறுப் பாளர் கள் நாராயணசாமி, சிங்காரவேல், ஜலீலா மொய்தீன், பொன்னம்பலம், ராமா னுஜம், தண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மொய்தீன், கார்த்திக் உடன் சென்றனர்.


courtesy:dinakaran

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பட்டுக்கோட்டை மேலும் மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறது. நம்ம தொகுதி MLA, MP, அனைவரும் முதலில் பட்டுக்கோட்டையே தான் கவனிக்கிறார்கள். ஏன் நமதூர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா பிறகு ஏன் நமதூர் வளர்ச்சிக்கு உதவ மறுக்கிறார்கள். பேருந்து நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனையே விரிவுபடுத்திதருமாறும் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், எங்கள் அடிப்படை தேவையே நிறைவேற்றி தருமாறும், எங்கள் ஊருக்கு புகைவண்டி வர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். பட்டுக்கோட்டை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிறார்கள் அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நம்ம ஊருக்கு செய்ய சொன்னால் மட்டும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். நமதூர் மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கும், இன்னொருபக்கம் திமுக கட்சி வெற்றி பெறவும், இன்னொருபக்கம் அதிமுக கட்சி வெற்றி பெறுவதற்கும் நம்ம உயிரை கொடுத்து உழைக்கிறோம். இதில் ஒரு கட்சி வெற்றி பெரும் அந்த கட்சி வேட்பாளரிடம் எங்கள் ஊருக்கு இந்த இந்த வசதிகள் செய்து தாருங்கள் என்று கூறினால் இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்குள் ஐந்து ஆண்டு முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் செய்து தருகிறேன் என்று கூறிவிடுவார். நாம் அவர்கள் வெற்றி பெற இரவு, பகல் பாராமல் உழைத்ததற்கு நமதுருக்கும், நமதூர் மக்களுக்கும் அமைதிப்படை அல்வாவை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன அடுத்த தேர்தல்தான். மக்களே நீங்கள் கட்சியால் வேறுபட்டு இருந்தாலும் நீங்கள் அனைவரும் அதிராம்பட்டினத்தை சார்தவர்கள் என்பதை மட்டும் மறந்துவிட கூடாது. நமதுருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற நாம் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். ஊரின் முன்னேற்றமே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
Post a Comment