எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழு தகவல்களையும் வாக்காளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா, எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை பலர் தேர்தல் நாள் அன்றுதான் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.
Epic <Space> Voter Id Number Send to 9444123456
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டையுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று புலம்பிக்கொண்டு வருவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதை தவிர்க்கும் வகையில், தேர்தல் கமிஷன் தற்போது புதிய ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உங்கள் செல்போனில் Epic என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு புகைப்பட வாக் காளர் அட்டையில் உள்ள எண்ணை டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். சிறிது நேரத்தில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதை உறுதி செய்வதுடன், நீங்கள் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும், வரிசை எண், பாகம் எண் என அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது