அதிரையில் இன்று முழுவதுமே மின்சாரம் இல்லை
என்று சொல்லலாம். இன்று காலையில் இருந்து மாலை 4 மணி வரை மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டு
கொண்டிருந்தது. 4 மணிக்கு பிறகு 8 மணிவரை மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
இதனால் எரிச்சலடைந்த மக்கள் மின்சார வாரியத்துக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தவாரு
இருந்தனர்.
இது குறித்து அதிரை
பிறை குழுவினர் அதிரை மின்சார வாரியத்திர்க்கு நேரடியாக சென்று விசாரித்ததில் அவர்கள்
கூறியதாவது….
“கனமழையால்
4 மணியளவில் மதுக்கூர் துணை மின்வாரித்திலிருந்து துவங்குறிச்சிக்கு செல்லும் மின்
இணைப்பில் பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி மதுக்கூர் துணை மின்வாரியத்தை
சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனை சரி செய்த
பிறகு மிலாரிக்காடில் மின்கம்பம் கீழே விழுந்தது. இதனை சரி செய்ய சில நேரம் தாமதம்
ஏற்ப்பட்டது. 7:50 மணியளவில் அந்த பிரச்சனை சரியானது விரைவில் மின்சார வினியோகம் செய்யப்படும்”
என்றார்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது