Automatic தொட்டில்- புதிய கண்டுபிடிப்பு (வீடியோ)!

0
குழந்தையின் அழுகைக்கு ஏற்ப தன்னிச்சையாக ஆடி குழந்தையைத் தூங்க வைக்கும் தொட்டில் ஒன்றை இந்தியத் தொழிலாளி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாதவன். ஆட்டோ மொபைல் மெக்கானிக்கான இவர் ஓமானிலுள்ள ராய் இன்டர்நேசனல் என்ற நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் குழந்தைகளைத் தூங்க வைக்கவும் அழும் போது சென்சார் மூலம் உணர்ந்து தானே ஆடும் விதத்திலான தொட்டில் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது ஓமானில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வடிவமைப்பு குறித்து ராஜேஷ் கூறும்போது, "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்க தொட்டிலை ஆட்டுவதையும் அதனால் அவர்களுக்கு இருக்கும் சிரமத்தையும் பலமுறை கண்டுள்ளேன். குழந்தை அழும்போது தானே ஆடும் விதத்தில் தொட்டில் ஒன்று ஏன் வடிவமைக்கக்கூடாது என்று நினைத்தேன்.

நான் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக் என்பதால் இயந்திரங்களின் அசைவுகள் குறித்து எனக்கு நன்கு பரிச்சயம் இருந்தது. எனவே அது குறித்து நான் என் நண்பர்களிடம் ஆலோசனை செய்ததோடு இணையத்தில் அது தொடர்பான பல பதிவுகளையும் படித்து ஆய்வு செய்து சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இதனை உருவாக்கியுள்ளேன்" என ஓமான் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.


மேலும் அவர் கூறும்போது, "இதற்கு ஒரு ஃபேனுக்குத் தேவையான மின்சாரம் மட்டும் போதுமானது. குழந்தை அழும் போது சென்சார் அதனைக் கண்டறிந்து தானாகவே தொட்டிலை அசையச் செய்யும். தாய்மார்களுக்கு இது நிச்சயம் மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கும். குறைந்த விலையில் கிடைக்க, ஃபைபரினால் இதனை உருவாக்குவதற்கு முயன்று வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

ராஜேஷின் இக்கண்டுபிடிப்பிற்கு அவருடைய நண்பர்களிடையேயும் நிறுவன மேலாளர்களிடையும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ராய் இன்டர்நேசனல் நிறுவனத்தின் தொழிலாளர் மேம்பாட்டுத்துறை மேலாளர் கதிஜா அல் ஷக்ஸி, "ராஜேஷின் கண்டுபிடிப்பு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். ராஜேஷின் இக்கண்டுபிடிப்பைச் சந்தைபடுத்துவது குறித்து தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறினார்.

           

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)