முஸாபர் நகரில் மீண்டும் கலவரம், ஆலிம்கள் மீது துப்பாக்கிச் சூடு!

0


தாருல் உலூம் 'தேவ்பந்த்' மதரசாவில் 'தவ்ரா' பாடங்கள் படித்து வரும், 2 ஆலிம்(மாணவர்)களின் மீது, வகுப்பு வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிவிட்டார்.


நேற்று முன்தினம் (23/05), முசப்பர் நகரின் 'மல்லோ புரா' பகுதியில், 'ஜும்ஆ' தொழுகை நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த, அபூசபா ஆசமி, முஹம்மத் முபாரக் ஆகியோர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும், முதலுதவிக்கு பின்னர்' மீரட்' மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முபாரக்'கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபடியால், மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

வெள்ளிக்கிழமை தோறும், தேவ்பந்த் மதரசாவின் சார்பில், சுற்றுப்புற ஊர்களில் தொழுகை நடத்த அனுப்பி வைக்கும் ஆலிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதலால், மதரசா நிர்வாகம் கடும் அச்சத்தில் உள்ளது.

மதரசா மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. ண்டுகுற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் H.N.சிங், தெரிவித்துள்ளார்.

நன்றி: மறுப்பு ஜாகிர் ஹுஸைன்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)