மிகப் பெரிய சுற்றுல்லா தளமாக மாறுகிறது மல்லிப்பட்டினம்

Pudhiyavan
0


மல்லிப்பட்டினம், அதிரையில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். வர்த்தக ரீதியாகவும் சுற்றுல்லா தொடர்பாகவும் அதிரைக்கும் இந்த ஊருக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.

மல்லிப்பட்டினம் என்றால் முதலில் நியாபகத்துக்கு வருவது மனோராவும், அங்குள்ள கடற்கரையும் ஆகும். வரலாற்றுச் சின்னமான இந்த மனோரா சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது என வராலாறுகளில் வருகிறது. இங்கிருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சுரங்கப்பாதை மூலம் செல்லலாம் என்றும், இந்த சுரங்கம் அதிரை மண்ணப்பன் குளத்தை கடந்து செல்கிறது என்றும் நமதூர் முன்னோர்கள் கூற கேள்விப்பட்டிருப்போம்.

அதிரை மக்கள் பெருநாள், விடுமுறை நாட்கள் போன்ற எந்தவொரு விஷேசமாக இருந்தாலும் அதிரை மக்கள் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ இந்த மனோராவுக்கு அங்குள்ள கடற்க்கரைக்கும் சென்று வருவர், இது நமதூர் மக்களின் தொன்றுதொட்ட வழக்கம். சிறுவர் சிறுமிகள் இங்கு அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சென்று விளையாடுவதற்க்கே ஆசையுடன் வருவர். 03 வருடங்களுக்கு முன்பு இங்கு உயரமான லைட் ஹவுஸ் ஒன்று கட்டப்பட்டது.

இருப்பினும் சில வருடங்களாக அரசின் அலெட்சியத்தால் இந்த வரலாறு கடந்த மனோராவும், அங்கு அமைந்துள்ள சிறுவர் பூங்காவும், அதையொட்டியுள்ள கடற்கரையும் பொழிவிழந்து காணப்பட்டுறது. இதனால் விடுமுறை நாட்களுக்கும், விஷேச தினங்களுக்கு இங்கு வந்து குவிந்துக் கொண்டிருந்த சுற்றுள்ளா பயணிகளின் வருகை குறைய துவங்கியது.

தற்பொழுது இதனை கருத்தில் கொண்டுள்ள சுற்றுள்ளா துறை அமைச்சகம் இந்த மனோராவையும் அங்குள்ள சிறுவர் பூங்காவையும் அதையொட்டியுள்ள கடற்கரையையும் சீர் செய்யும் பணி துவங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் இங்கு சுற்றால்லா பயணிகளின் கூட்டம் குவிமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)